சென்னை:
அரசு மதுபான கடைகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிககப்படும் என்று அமைச்சர் தங்கமணி சட்டப் பேரவையில் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இன்று ஆயத்தீர்வை தொடர்பான மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி, டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் ஆகியோருக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று கூறினார்.
இந்த ஊதிய உயர்வு வரும் செப்டம்பர் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்றும், ஒருவருக்கு தலா ரூ.600 வரை ஊதிய உயர்வு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதே தமிழக அரசின் கொள்ளை என்றும், அவ்வாறு செய்தால் உயிரிழப்பு ஏற்படும் என்பதால் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதாகவும் கூறினார்.