மும்பை

ந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு வி வி எஸ் லட்சுமணன் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட் பதவிக்காலம் உலகக்கோப்பை தொடருடன் நிறைவடைந்தது.  இந்த ஆண்டின் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியடைந்தது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் விலகினார். ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு அவர் விண்ணப்பிக்கப் போவதில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக வி வி எஸ் லட்சுமணன் நியமிக்கப்படலாம் எனக்கூறப்படுகிறது. மேலும் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் ராகுல் டிராவிட் வரும் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராகச் செயல்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.