Skip to content
  • Fri. Jan 16th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
  • Youtube
தமிழ் நாடு

30 வருடம் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு விஆர்எஸ்… செங்கோட்டையன்

Apr 18, 2020
திருச்சி:
30 வருடம் பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு (விஆர்எஸ்) கொடுப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் தெரிவித்துள்ளார்.
இன்று திருச்சி அருகே தொட்டியம் பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
பள்ளி இடை  நிற்றலில்  இந்தியாவில் தமிழ்நாடு தான்  குறைவாக இருப்பதில் முதலிடம் பிடித்திருக்கிறது. இதனால் நிதி ஆயோக்  தர குறியீட்டில் தமிழ்நாடு முதல் இடம் பிடிக்கும்  என்றார்.
 30 வருடம் பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் என்கிற திட்டம் பரிசீலனையில்  உள்ளது.  இதுகுறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
மேலும்,  விளையாட்டு  வீரர்களுக்கு வாரம் ஒருமுறை முழுநாள் பயிற்சி அளிக்கவும், அதே போல  விளையாட்டு வீரர்களுக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் நூறு ரூபாய் ஊக்கதொகையை  அதிகரித்து தரவும்  நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர், இதுகுறித்து முதல்வரிடம் ஆலோசனை செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில்  5 மற்றும் 8ம்  வகுப்புகளுக்கு நடத்தப்பட உள்ள  பொது தேர்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு  மட்டும்தான் பொது தேர்வு நடைபெறு என்று கூறியவர்,  இந்த பொதுதேர்வு மாணவர்களின் கல்விதிறனை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்றும், இடைநிற்றல் என்கிற  நிலைக்கு தமிழ்நாடு வழிவகுக்காது என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
[youtube-feed feed=1]

Post navigation

ராயபுரத்தில் 73 பேர் பாதிப்பு: சென்னையில் கொரோனா பாதிப்பு 228 ஆக உயர்வு…
அபராதம் ரூ.1 கோடியை தாண்டியது: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை (18ந்தேதி) 1,94,339 வாகனங்கள் பறிமுதல்

Related Post

தமிழ் நாடு

நாகர்கோவில், திருச்சி, தாம்பரம்: தமிழ்நாட்டில் மேலும் 3 புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம்

தமிழ் நாடு

வள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை – அண்ணா விருதினை அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கினார் மு.க.ஸ்டாலின்

தமிழ் நாடு

டாஸ்மாக் தலைவர் வி​சாகன் உள்பட தமிழ்நாட்டில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

உலகம்

உலகம் மருத்துவம்

‘ஆண்கள் கர்ப்பமாக முடியுமா?’ – அமெரிக்க செனட்டில் ஜோஷ் ஹாவ்லி–டாக்டர் நிஷா வர்மா இடையிலான மோதல் வைரல்

January 16, 2026 Sundar
இந்தியா உலகம்

77வது குடியரசு தினவிழா: சிறப்பு விருந்தினராக ஐரோப்பிய யூனியன் தலைவர் பங்கேற்பதாக மத்தியஅரசு அறிவிப்பு

January 16, 2026 A.T.S Pandian
இந்தியா உலகம்

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு பயணத்தை தவிருங்கள்! இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

January 16, 2026 A.T.S Pandian
உலகம்

விவசாய நிலங்களில் யானைகள் புகுந்தால்… அது உணவுக்காக மட்டுமல்ல; மருந்துக்காகவும் இருக்கலாம்!

January 15, 2026 Sundar
ஆன்மிகம் இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் சினி பிட்ஸ் தமிழ் நாடு

 பத்திரிக்கை.காம் வாசகர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

January 15, 2026 A.T.S Pandian

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer