சென்னை: விருப்ப ஓய்வு கேட்ட சகாயம் ஐ.ஏ.எஸ்.. அரசு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார். கடந்த ஆண்டு (2020) அக்டோபர் மாதம் அவர் விருப்ப ஓய்வு கேட்டு கடிதம் அளித்திருந்தார். இந்த நிலையில், அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு, அரசு பணியில் விடுவிக்கப்பட்டு உள்ளார்.
லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற வார்த்தைக்கேற்ப சிறப்பாக பணியாற்றி வந்தவர் சகாயம் ஐஏஎஸ். இவர் கடந்த 6 வருங்களாக தமிழ்நாடு அறிவியல் நகர துணைத்தலைவராக இருந்து வருகிறார். அவருக்கு திறமையான பதவிகள் எதும் வழங்காமல் தமிழகஅரசு பழி வாங்கி வந்தது.
இவர் மதுரை ஆட்சியராக இருந்தபோது, அங்கு நடைபெற்ற கிரானைட் ஊழலை வெளிக்கொணர்ந்தார். மேலும், மற்றும் மணல் குவாரிகளில் நடைபெற்று வந்த ஊழலை அம்பலப்படுத்தினால். அதனால், ஆளும் கட்சிக்கு அவரது மீது பழிவாங்கல் போக்கு இருந்து வந்தது. அதனால், அவரது திறமைக்கு ஏற்ற பணி வழங்காமல் மாநிலஅரசு அவரை சாதாரண பணியில் அமர வைத்திருந்தது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானவர், விஆர்எஸ் கேட்டு அவர் விண்ணப்பித்திருந்தார்.
ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவிக்காலம் 60 வயது. ஆனால், சகாயத்துக்கு தற்போது 57 வயதுதான் ஆகிறது. அரசு பணியாற்ற விரும்பின்மையால், 3 ஆண்டுகளுக்கு முன்பே, அவர் விஆர்எஸ்க்கு விண்ணப்பித்த நிலையில், அவருக்கு விருப்ப ஓய்வு வழங்கப்பட்டு உள்ளது.