வெண்ணுமலையப்பர் திருக்கோவில், பெரியகண்டியங்குப்பம். விருத்தாசலம்
தல சிறப்பு :
விருத்தாலம் நகரின் காவல் தெய்வமாக இக்கோயில் அமைந்துள்ளது.
பொது தகவல் :
கோயில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. பிரகாரத்தில் விநாயகர், முருகன், ஆதி அய்யனார், கருப்பசாமி, சுந்தரமூர்த்தி அய்யனார், தட்சிணாமூர்த்தி சன்னதிகள் அமைந்துள்ளன.
தல வரலாறு :
சுந்தரமூர்த்தி நாயனார் திருவாரூரில் இருந்து திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) வழியாக திருநாவலூர் சென்றார். அப்போது விருத்தகிரீஸ்வரர் அவரை அழைத்து, தன்னை பற்றி பாடல் பாடுமாறு கூறினார். அதற்கு சுந்தரமூர்த்தி நாயனார் மறுத்துவிட்டு தன் பயணத்தை தொடர்ந்தார். பின்னர் விருத்தகிரீஸ்வரர் தனது காவலாளிகளை விட்டு, சுந்தரமூர்த்தி நாயனாரை அழைத்து வரச்செல்லி மீண்டும் தன்னை பற்றி பாடல் பாடும்படி கூறுகிறார். அப்போதும் சுந்தரமூர்த்தி நாயனார் மறுத்துவிட்டுச் சென்றார். இதனால் ஆத்திரமான விருத்தகிரீஸ்வரர். இவ்வழியாக மீண்டும் சுந்தரமூர்த்தி நாயானார் வரக்கூடாது என்பதற்காக, வடக்கு எல்லையான பெரிய கண்டியங்குப்பத்தில் வெண்ணு மலையப்பரை, காவலுக்கு நியமித்தார் என்பது இக்கோவிலின் ஐதீகம்.
திருவிழா :
ஆனி திருமஞ்சனம், ஐப்பசி அன்னாபிஷேம் கார்த்திகை தீபம், மார்கழி ஆருத்ரா தரிசனம், பங்குனி உத்திரம் 10 நாள் உற்சவம் சித்திரை வருடப்பிறப்பு.
பிரார்த்தனை :
திருமண தடை நீங்கவும், நோய்கள் குணமாகவும், குழந்தை பாக்கியம் பெறவும், திருடு போன பொருள்கள் மீண்டும் கிடைக்கவும் பிரார்த்தினை செய்யப்படுகிறது.
நேர்த்திக்கடன் :
கிடா வெட்டி பூஜை, வீரனாருக்கு பிராது கட்டும் முறை.
இருப்பிடம் :
விருத்தாசலம் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு கி.மீ. தூரத்திலுள்ள பெரியகண்டியங்குப்பத்தில் கோயில் அமைந்துள்ளது.