கொல்கத்தா: 294 தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்க மாநில சட்டமன்ற தேர்தல்  இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோதல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அங்கு ஆட்சியை தக்க வைப்பதில்  திரிணமூல் காங்கிரஸ், ஆட்சியை கைப்பற்ற பாஜக, இடதுசாரிகள்- காங்கிரஸ் கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. முக்கியமாக, திரிணமூல்-பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ஏற்கனவே 7 கட்ட சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், இன்று  35 தொகுதிகளுக்கான இறுதி கட்டத் தோதல்  நடைபெற்று வருகிறது. 4 மாவட்டங்களைச் சேர்ந்த  சேர்ந்த 35  தொகுதிகளில் 283 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இவர்களில் 35 பேர் பெண்கள்.

தோதலில் 84,77,728 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். அவா்களில் 41.21 லட்சம் போ பெண்கள்; 158 போ மூன்றாம் பாலினத்தவா் ஆவா்.

தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிகாலையிலேயே பல வாக்குச்சாவடிகளில் பெண்கள் உள்பட பலரும் குவிந்து, ஆர்வமாக வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.