டெல்லி: வேட்பாளரைப் பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்ளும் ‘முழு உரிமை’ வாக்காளருக்கு இல்லை, அரசியல்வாதிகள் சொத்து பட்டியலை முழுமையாக தர வேண்டிய அவசியமில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. இருது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
அருணாச்சல பிரதேசத்தில் தேஜு தொகுதியில் சுயேச்சை எம்எல்ஏ கரிகோகிரி தேர்ந்தெடுக்கப்பட்டதை நீதிமன்றம் உறுதி செய்த உச்ச நீதிமன்றம், கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் ஜூலை 2023 தீர்ப்பை ரத்து செய்தது. எம்எல்ஏ கரிகோ தனது வேட்புமனுவில் மூன்று வாகனங்கள் வைத்திருப்பதாக குறிப்பிடாததன் அடிப்படையில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் மூன்று முக்கிய கருத்துக்களை தெரிவித்தது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கும் ‘தனியுரிமை’ உரிமை உண்டு என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ், சஞ்சய்குமார் அமர்வு இந்த பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது.
வேட்பாளர் தன்னை நிரூபிக்க தனது அத்தனை விபரங்களையும் வாக்காளர்களுக்கு முன் வைக்க வேண்டும் என்பதில் உடன்படவில்லை.
ஒரு வேட்பாளர் சொத்துகள் குறித்த அனைத்து விபரத்தை வெளியிட வேண்டிய அவசியமில்லை .
வேட்பாளரைப் பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்ளும் ‘முழு உரிமை’ வாக்காளருக்கு இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
அரசியல்வாதிகளின் சொத்து விபரம் தொடர்பான விபரம் குறித்து கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், தனிப்பட்ட விஷயங்களை ரகசியமாக வைத்துக் கொள்ளும் உரிமை தலைவர்களுக்கும் உள்ளது. பொது வாழ்க்கையில், தேவையில்லாத விபரங்களை வேட்புமனுவில் குறிப்பிட வேண்டிய தேவையில்லை என்று உச்சநீதி மன்றம் கூறியது.
ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தலுக்கு முன் தனது சொத்து விவரங்களையும், வழக்குகளையும் பொதுமக்கள் முன் வைப்பார்கள். ஜனநாயக நடைமுறையை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த விதி அமல்படுத்தப்பட்டது. ‘வாக்காளர்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக ஒரு வேட்பாளர் தனது உயிரைப் பணயம் வைக்க வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் கருதவில்லை. ‘ஒரு வேட்பாளர் தனக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் வெளியிடாதது ஒரு குறைபாடாக கருதப்படாது’ என்று நீதிமன்றம் கூறியது.
கரிகோ கிரி வழக்கில், வேட்பாளரைப் பற்றி தெரிந்துகொள்ள வாக்காளர்களிளுக்கு முழு உரிமை உள்ளது என கூற முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தலைவரைப் பற்றி எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் உரிமை வாக்காளருக்கு இல்லை என்பதே இதன் பொருள். தலைவர்கள் குறித்து வாக்காளர் அறிந்து கொள்வது முக்கியமானது. ஆனால் பொது வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட நடத்தையை அறிந்து கொள்ள மட்டுமே தகவல் தேவை என்பது வரையறுக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.
2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. அரசியல் சாசனப்படி, தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களின் விவரம் முழுவதும் வாக்காளர்கள் தெரிந்துகொள்ள உரிமை உண்டு. அதன்படியே தேர்தல் ஆணையம் தேர்தலில் போட்டியிடும் நபர் குறித்த விவரங்களை கோருகிறது.
ஆனால், உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பு விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த தீர்ப்பு ஊடகங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை அனைவரும் அதை மிகுந்த ஆர்வத்துடன் விவாதித்து வருகின்றனர்.