சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்து ஸ்டாலின் தலைமையில் ஆட்சி மலர உதவுங்கள் என கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர்மொகிதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘
இதுகுறித்ரது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக சட்ட மன்ற தேர்தல் நாளை (ஏப்ரல் 6-செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இத்தேர்தலில் தமிழகத்தில் உள்ள 6 கோடியே 29 இலட்சம் வாக்காளர்கள் தங்களின் வாக்குரிமையைப் பதிவு செய்ய இருக்கிறார்கள்.
இந்த தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் திமுக 173 தொகுதிகளிலும் ம.தி.மு.க. 6 தொகுதிகளிலும் மனித நேய மக்கள் கட்சி 2 தொகுதிகளிலும் கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி 3 தொகுதிகளிலும் தமிழக வாழ்வுரிமை கட்சி 1 தொகுதிகளிலும் பார்வர்டு பிளாக் 1 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு உதய சூரியன் சின்னத்திலும், 25 தொகுதிகளிலும் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு வேட்பாளர்களுக்கு ‘கை’ சின்னத்திலும், 6 தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சீய கம்யூனிஸ்டு கட்சிக்கு வேட்பாளர்களுக்கு ‘அரிவாள் சுத்தியல்’ சின்னத்திற்க்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ‘கதிர் அறிவாள்’ சின்னத்திலும், இந்திய யூனியன் முஸ்லிம் லிக் போட்டியிடும் 3 தொகுதிகளான கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம் ஆகிய தொகுதிகளில் போட்டி யிடும் வேட்பாளர்களுக்கு ஏணி சின்னத்திலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகளில் பானை சின்னத்திலும் வாக்களித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சி மலர உதவுங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.