மதுரை: வாக்குக்கு பணம் கொடுப்பவர்களை சோதனை செய்வதில்லை, அப்பாவி மக்களை மட்டுமே சோதனை என்ற பெயரில் அச்சுறுத்தும் அதிகாரிகளை செருப்பை கழற்றி அடிக்க வேண்டும்  என மாநில தேர்தல் ஆணையம் மீது நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரையில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் அறிமுகம் கூட்டம் நடைபெற்றது. உள்ளாட்சியில் நல்லாட்சி மலர்ந்திட வேண்டும் என்ற பெயரில் நடைபெறும் இந்த அறிமுக கூட்டத்தில் அக்கட்சியின்  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு சிறைப்புரை ஆற்றினார்.

அப்போது, மத்திய மாநில அரசுகளை கடுமையாக சாடியதுடன், மாநில தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளையும் கடுமையாக விமர்சித்தார்.  அப்போது, தேர்தல் நடத்த விதிமுறை அமலில் உள்ளதாக கூறும் தேர்தல் ஆணையம், அதை கண்காணிக்க பறக்கும் படை அமைத்துள்ளது. ஆனால், இந்த பறக்கும் படையினர்,  வாக்குக்கு பணம் கொடுப்பவர்களை சோதனை செய்யாமல், மருத்துவமனைக்கும், திருமணம்  போன்ற அத்தியாவசிய தேவைக்கா பணம் எடுத்து செல்வர்களிடம் சோதனை, அவர்களிடம் இருந்து பணத்தை பறிக்கிறது.

ஒவ்வொரு முறையும் தேர்தல் பணிக்காக பலகோடி செலவு செய்து, வாக்குக்கு பணம் வாங்குவது குற்றம், கொடுப்பதும் குற்றம், ஓராண்டுக்கு சிறை என்று எழுதி வைத்துள்ளார்கள். ஆனால்,  ஆணையம் அமைத்துள்ள பறக்கும் படை, நடக்கும் படை குதிக்கும் படைகள் எல்லாம், அரசியல் கட்சிகள்  வாக்குக்கு காசு கொடுப்பவர்களிடம் சோதனை செய்வதில்லை,  அதை கண்டுகொள்வதுமில்லை என்று குற்றம் சாட்டியதுடன், அப்பாவி மக்களிடம் இருந்து பணத்தை பறிக்கும் அவர்களை  செருப்பை கழட்டி அடிக்காமல் என்ன செய்வது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், சமூகநீதி என்பது குறித்து திமுக அரசை சாடியவர், சமுக நீதி என்பது, சாதி வாரியான எண்ணிக்கை அடிப்படையில் இட ஒதுக்கீடு.  நாடு முழுவதும், சாதி வாரியாகவும், மொழி வாரியாகவும் கணக்கெடுப்பு எடுக்க வேண்டும். ஓட்டுக்க பணம் கொடுக்க அனைத்தையும் பார்த்து, பார்த்து பணம் கொடுப்பவர்கள் போன்று,  சாதி வாரியாக கணக்கெடுக்க வேண்டும் என்றும்  என்றும் வலியுறுத்தினார்.