சென்னை: வஉசியின் 88வது நினைவு நாளையொட்டி, அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.
தமிழர் உள்ளங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பர் கப்பலோட்டிய தமிழன். இன்ப விடுதலைக்காகத் துன்பச் சிறையைத் துச்சமென நினைத்த அந்தச் செக்கிழுத்த செம்மலைப் போற்றுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் முக்கியமான பலர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், ஆங்கிலேயேனுக்குஎதிராக, சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டதால், ஆங்கிலேயரால் கொடுமைபடுத்தப்பட்டதுடன், இரட்டை ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் செக்கிழுக்கதுடன், தனது சுதந்திர வேட்கையை விட்டு விடாமல், இறுதி வரை போராடியவர் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை. தமது பேச்சாலும், எழுத்தாலும், செயல்பாடுகளாலும் சுதேசி வேள்வியை ஊட்டியவர். தன்னலமற்ற வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றும் வகையில் அவருக்கு இன்று நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இன்று மாநிலம் முழுவதும் அவரது 88வது நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவுநாளையொட்டி, அரசியல் கட்சி தலைவர்கள், அவருக்கு புகழஞ்சலி, செலுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்ப் பற்று-ஈகையுணர்வு-விடுதலைத் தாகம் ஆகியவை கொண்டு வரலாற்றிலும் தமிழர் உள்ளங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனாரின் 88-வது நினைவு நாளில், இன்ப விடுதலைக்காகத் துன்பச் சிறையைத் துச்சமென நினைத்த அந்தச் செக்கிழுத்த செம்மலைப் போற்றுவோம்! அவரது தியாக வாழ்வை வணங்குவோம்! இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]