கீவ்: ரஷ்ய அதிபர் புதின் புற்றுநோயால் சீக்கிரமே இறந்து விடுவார் என உக்ரைன் ராணுவ உளவுத்துறை தலைவர் கைலோ புடோனோவ் (Kyrylo Budanov) தெரிவித்து உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியது. இந்த நிலையில் இந்த போர் தொடங்கி ஓராண்டை நெருங்கி வரும் நிலையில், இந்த போர் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. இதற்கிடையில் புத்தாண்டு அன்று, ரஷிய ராணுவத்தினர் தங்கியிருந்த முகாம் மீது உக்ரைன் ராணுவத்தினர், அமெரிக்க ஏவுகணைகளைக்கொண்டு தொடர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான ரஷிய ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், இதனால் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
இதற்கிடையில் உக்ரைன் நாட்டின் ராணுவ உளவுத்துறை தலைவர் கிரிலோ புடனொவ் கூறுகையில் 70 வயதான ரஷ்ய அதிபர் புதின் புற்றுநோயால் சீக்கிரமே இறந்து விடுவார் என்றும், புதின் தீவிரமான புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக புதினுக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஏபிசி நியூஸ் உடனான ஒரு அரிய நேர்காணலில், புடினின் உடல்நிலை தொடர்பான பல பிரச்சினைகள் குறித்து உக்ரைன் உளவுத்துறை தலைவர் புடனோவ் பல்வேறு பரபரப்பு தகவல்களை வெளியிட்டு உள்ளார்.
ரஷ்ய கொடுங்கோலன் விளாடிமிர் புடினுக்கு புற்று நோய் பாதிப்பு இருப்பதால், அவர் கிரெம்ளின் தலைவர் நிகழ்வுகளில் இருந்து விலகி பொதுமக்களின் பார்வையில் இருந்து விலகி வருகிறார் என்று தெரிவித்துள்ளதுடன், இதை பல ஆதாரங்கள் உறுதிப்படுத்தி உள்ளது என்று கூறியதுடன், நீண்ட காலமாக புற்றுநோயுடன் போராடி வரும் புதின் விரைவில் இறந்துவிடுவார் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ரஷ்ய எதேச்சதிகாரியின் உயிருக்கு ஆபத்தில் இருப்பதாகக் கூறியதுடன், “அவரது மரணத்திற்கு முன் போர் முடிவுக்கு வர வேண்டும்” என்றார். 2023 ஆம் ஆண்டில் உக்ரைன் வெற்றிகரமாக வெளிப்படும், புடினின் மரணம் “முழு உலகிற்கும்” பயனளிக்கும் என்றும் மேற்கு நாடுகளை “பயப்பட வேண்டாம்” என்றும் அவர் கூறினார்.
கொடுங்கோலன் “உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறாரா” என்று மீண்டும் நெறியாளர் கேட்டதற்கு, : “நிச்சயமாக. அவர் நீண்ட காலமாக, மிக நீண்ட காலமாக நோய்வாய்ப் பட்டார். அவர் மிக வேகமாக இறந்துவிடுவார் என்று நினைக்கிறேன். நான் நம்புகிறேன். “அவருக்கு புற்றுநோய் இருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன் என்று மீண்டும் கூறியவர்,. புடினுக்கு நெருக்கமான “ஆதாரங்களில்” இருந்து தனக்குத் தகவல் கிடைத்ததால், தலைவர் நோயால் அவதிப்படுகிறார் என்பது தனக்கு “இப்போதுதான் தெரியும்” என்று அவர் கூறினார்.
புடினின் உடல்நிலை குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு மத்தியில், அவருக்குப் பதிலாக யாரை நியமிப்பது என்பது குறித்தும், அவரது மரணத்தால் உண்மையான பலன் கிடைக்குமா என்பது குறித்தும் கவலைகள் எழுந்துள்ளன.
70 வயதான புடின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை கிரெம்ளின் தலைவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தியதாக உக்ரைனின் பாதுகாப்புப் புலனாய்வுத் தலைவர் கைரிலோ புடானோவ் தெரிவித்துள்ளார். புடின் கடந்த ஆண்டு இறுதியில் இரண்டு பொது நிகழ்வுகளை ரத்து செய்த பின்னர், அவரது சில நடவடிக்கைகள் மர்மமாகவே உள்ளது. அவர் தனிமையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கைலோ புடோனோவ் (Kyrylo Budanov) புதின் விரைவில் இருந்து விடுவார் என்ற கூறிய தகவல் மேற்கத்திய நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.