கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் விவேகம். தல அஜித் ஹீரோவாக நடிக்க பாலிவுட் பிரபலம் விவேக் ஓபராய் வில்லனாக நடித்திருந்தார்.

கடந்த பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று தன் மனைவி பிரியங்காவை பைக்கில் பின்னால் அமர வைத்துச் செல்லும் வீடியோ ஒன்றை பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் விவேக் ஓபராய் மற்றும் அவரது மனைவி பிரியங்கா இருவருமே ஹெல்மெட், முகக்கவசம் அணிந்திருக்கவில்லை.

இதனைக் குறிப்பிட்டு நெட்டிசன்கள் பலரும் விவேக் ஓபராயை கடுமையாக விமர்சித்து வந்தனர். முகக்கவசம் மற்றும் ஹெல்மெட் அணியாத இருவருக்கும் அபராதம் விதிக்க வேண்டும் என்று மும்பை காவல்துறை, மும்பை மாநகராட்சி உள்ளிட்ட ட்விட்டர் கணக்குகளை நேரடியாக டேக் செய்து வந்தனர்.