சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடிகர் விவேக் நேற்று தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

இன்று வீட்டில் இருந்த நடிகர் விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை குடும்பத்தினர் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐ.சி.யூ பிரிவில் ஆபத்தான நிலையில் எக்மோ கருவி பொருத்தப்பட்டு நடிகர் விவேக்கிற்கு சிகிச்சை என மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

[youtube-feed feed=1]