அஜீத்தின் “விவேகம்” படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

இயக்குநர் சிவா – அஜீத்

டிகா் அஜித் நடித்து திரைக்கு வர இருக்கும் “விவேகம்” திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது.  மேலும் இச் சான்றிதழ் வழங்கப்பட்டதற்கான விளக்கத்தையும் தணிக்கை குழு தெரிவித்துள்ளது.

சமீபகாலமாக தமிழ்த் திரைப்படம் எதுவும் பெரு வெற்றி பெறவில்லை. (பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆன பாகுபலி-2 படம், தெலுங்கு டப்பிங்.)  இந்த நிலையில் ஜித் நடித்து வரும் 10ம் தேதி வெளியாக இருக்கும் விவேகம் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இப்படத்தின் டீசா் இணைதளத்தில் வெளியாகி மிக அதிக பார்வையாளர்களை ஈர்த்தது.

 

தற்போது இப் படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை அளித்துள்ளது. படத்தில் சண்டை காட்சிகள் அதிகம் இடம் பெற்றுள்ளதால் இச்சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளதாக  விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

விவேகம் படத்தில் அஜித்துடன் காஜல் அகா்வால், அக்சரா ஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். சிவா இயக்கியுள்ளார்.

 

 
English Summary
Vivegam movie got a U/A Certificate