விஸ்வநாதன் பொய்ப்பிரச்சாரம்: ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு

Must read

tr1
 
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியும், அதிமுக சார்பில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் போட்டியிடுகின்றனர். திமுக – அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆத்தூரில் ஐ.பெரியசாமியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பிள்ளையார் நத்தம் பகுதியில் பிரச்சாரம் செய்த ஐ.பெரியசாமி, ஆத்தூர் தொகுதியில் அதிக அளவில் முதியோர் உதவி தொகையை நிறுத்தியதும், தமிழகத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்தியதும் ஆத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நத்தம் விஸ்வநாதன் தான். இவற்றையெல்லாம் மறைத்து பொதுமக்களிடம் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார் விஸ்வநாதன் என குற்றம் சாட்டினார்.

More articles

Latest article