சென்னை:

ண் பார்வையிழந்த இளைஞர் ஒருவருக்கு பிரபல இசையமைப்பாளர் டி.இமான்  திரைப்பட படத்தில் பாடல் பாட வாய்ப்பு கொடுத்து அசத்தியுள்ளார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவரது ரசிகர்கள் இமானை புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

கடந்த சில நாட்களாக சமூக வளைதளங்களில் கண்தெரியாத இளைஞர் ஒருவர், அஜித் நடித்து வெளியான விஸ்வாசம் படத்தில் உள்ள  கண்ணனா கண்ணே பாடலைப் பாடும் காட்சி வைரலாகி வருகிறது. அந்த படத்தில், அந்த பாடலுக்கு இசையமைப்பாளர்  டி.இமான் இசை அமைத்திருந்த நிலையில், தற்போது கண்பார்வையற்ற அந்த இளைஞரின் குரலும் இமானின் கவனத்திக்கு கொண்டு செல்லப்பட்டது.

அதையடுத்து, அந்த இளைஞரின் அழகான குரலுக்கு கேட்ட இமான், அவருக்கு தனது படத்தில் பாட்டு பாட வாய்ப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட கண்தெரியாத இளைஞர்  கிருஷ்ணகிரி மாவட்டம் நொச்சிப்பட்டியை சேர்ந்த திருமூர்த்தி என்பது தெரிய வந்துள்ளது.இளம் வயதிலேயே பெற்றோரையும் இழந்து ஆதரவற்று தவித்து வரும் நிலையில்தான்,  அவர் தனது இனிமையான குரலால் கண்ணானே கண்ணே பாடலை பாடினார்.

இதனை கவனித்த இசையமைப்பாளர் டி இமான், இந்த இளைஞரின் போன் நம்பரை கேட்டு தனது டிவிட்டர் பக்ககத்தில் டிவிட் பதிவிட்டிருந்தார். அதைப் பார்த்த அவரது ரசிகர்கள் அந்த இளைஞரை கண்டுபிடித்து, அவரது போன் நம்பரை பெற்று கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து திருமூர்த்தி யிடம் பேசிய இசையமைப்பாளர் இமான், அவருக்கு தனது இசையில் பாட வாய்ப்பு தருவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனத டிவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டு உள்ளார். அதில்,  தனது வேண்டுகோளை பகிர்ந்தமைக்கு நன்றி,  அந்த நபரிடம் பேசிவிட்டேன். விரைவில் அவருக்கு ஒரு பாடலுக்கு வாய்ப்பு கொடுப்போம். கடவுள் அவருடன் இருக்கட்டும் அவருக்கு ஆறுதலை கொடுக்கட்டும். திருமூர்த்திக்கு மகிழ்ச்சியான நாட்கள் உள்ளன.. கடவுளை புகழுங்கள்.. என பதிவிட்டிருக்கிறார்.

இமானின் இந்த உதவிக்கு நெட்டிசன்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

பார்வயைற்ற இளைஞர் திருமூர்த்தியின்  பாடலை நீங்களும் ரசியுங்களேன்….

 

 

[youtube-feed feed=1]