சென்னை

மல்ஹாசன் அரசியலில் இறங்கப் போவதை இயக்குனரும் நடிகருமான விசு கிண்டல் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இயக்குனரும் நடிகருமான விசு நாடகத் துறையில் இருந்து வந்தவர்.   அவருடைய படங்களில் அவர் எழுதிய பல வசனங்கள் புகழ் பெற்றுள்ளது.   சமீபத்தில் கமலஹாசன் இந்து தீவிரவாதம் என குறிப்பிட்டு பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.   அவர் மீது வழக்கு பதியப் பட்டு உள்ளது.   விசு தற்போது பா ஜ க வில் இருக்கிறார்.  அதனால் கமலஹாசனின் கருத்துக்கு கிண்டலாக அவருடைய பாணியில் ஒரு அறிக்கை வெளியிட்டு கமலஹாசனை வெகுவாக கலாய்த்து உள்ளார்.

விசு தனது அறிக்கையில், “ஹல்லோ கமல்ஜீ!  நீங்க சிம்லா ஸ்பெஷல்னு ஒரு படம் நடிச்சீங்களே அதுக்கு கதை வசனம் எழுதிய விசு நான் தான்.  நீங்க நிச்சயம் பெரிய அரசியல் வாதி ஆகப் போறீங்க.   ஏன்னா வடிவேலு சொல்லியது போல இந்துக்கள் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்க.  இதை புரிஞ்சுக்கிட்டு சீண்டி விடறீங்க.  யாராவது ஒருத்தன் அதையும் மீறி எகிறுனா அதை வெச்சு பாலிடிக்ஸ் பண்ண ஏதோ ஒரு குள்ள நரி உங்களுக்கு சொல்லிக் குடுத்திருக்கு.

வழக்கமாக தலையை சுத்தி மூக்கை தொடும் உங்க ஸ்டைலில் இந்து மதம் தீவிரவாதிகள் இல்லாத மதம்னு ஒரு வார்த்தை சொல்ல,  அதைக் கேட்ட யாரோ ஒருவன் எங்கியோ ஒரு மூலையிலே இருந்து உங்களை தூக்குல போடணும்னு சொல்ல, அதைக் கேட்ட அரசியலில் போணி ஆகாதவன் உங்க முன்னாலே நிக்க, அதைப் பார்த்துட்டு விளங்கினவன், விளங்காதவன் கொடி கட்டி பறக்கிறவன்,  கொடியை ஆடு மாடு கிட்ட மேய்க்க விட்டவன் எல்லோரும் கூட வந்து சேர,  ஒரு கூட்டமே டி வி முன்னாலே உங்களை சப்போர்ட் பண்ண வந்து நிக்கிறாங்க.

எப்படியும் இன்னொரு 15 நாளைக்கு ஊடகங்களுக்கு தீனி கிடைச்சாச்சு.   அது முடிந்ததும் என் பாயிண்டை ஃபாலோ பண்ணுங்க.  பார்ப்பான்,  ஆரியக் கூட்டம், கைபர் கணவாய், போலன் கணவாய்,  ஆஃப்கானிஸ்தான்,  ஆடு மாடு மேய்த்தவன் அப்படின்னு ஒன்னொன்னா ஆரம்பியுங்க செம கூட்டம் பிச்சுட்டு போகும்.

வீட்டுலே உங்களுக்கு பொழுது போகணுமே, பாவம்,  வீட்டுலே யாரும் இல்லை, தனிக்கட்டை, இந்த வயசுலே இப்படி பொழுது போனாத்தான் உண்டு.  அது சரி சார் பா ஜ க மேல் உங்களுக்கு இத்தனை கோவம் எதுக்கு சார்? சென்சார் பொர்டுலே உங்களுக்கு வேண்டாதவங்களை அதிகாரி ஆக்கினதுனாலே என சில பேரு சொன்னாங்க.   ஆனால் நான் அதெல்லாம் கிடையாது.  சார் இதுக்கு மேலேயே பார்த்தவர்னு சொல்லிபுட்டேன்

சார்,  நீங்க வரி ஒழுங்கா கட்டிடறீங்களாமே, சூப்பர் சார்.  ஆனால் புக்குல காட்டும் வருமானத்துக்கு மட்டும் தானே கட்டறீங்களாம்.   அதாவது 100 ரூபாய் வாங்கிட்டு அதை 40 ரூபாய்னு எழுதி அதுக்கு மட்டும் கரெக்டா வரி கட்டிடறீங்களாமே.  மீதி 60 ரூபாயை கறுப்புப் பணமுன்னு சொல்லறாங்களே அது சரியா என்னை மாதிரி ஞானசூனியத்துக்கு கொஞ்சம் சொல்லுங்களேன்.

சரி சார்  இன்னொரு யோசனை, பையில் ஒரு மைக்கை வெச்சுக்குங்க.  நெய்வேலிக்கு போயி சும்மா பழுப்பு நிலக்கரி சுரங்கத்துக்கு மேலே நின்னு வேடிக்கை  பாருங்க.  செமையா கூட்டம் கூடும்.  அதான் பப்ளிசிட்டி ஸ்டண்ட்.   என் படத்திலே வருமே ஒரு பாட்டு அதே பாட்டு இப்ப உனக்கென்ன மேலே நின்றாய் ஓ கமலஹாசான்னு கேட்கும் பாருங்க.  ஜமாயுங்க சார்”  என்னும் பாணியில் கமலஹாசனை கிண்டல் செய்துள்ளார்.