ஜியோவில் ரூ.11,367 கோடி முதலீடு செய்த விஸ்டா நிறுவனம்

Must read

மும்பை

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் பிரபல பங்கு வர்த்தக நிறுவனமான விஸ்டா ஈக்குவிடி பார்ட்னர்ஸ் ரூ11,367 கோடி முதலீடு செய்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பங்குச் சந்தை வீழ்ச்சியால் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மதிப்பு மிகவும் சரிந்தது.

அத்துடன் ஜியோ நிறுவனத்தின் கடன் தொகையும் அதிகரித்தது.

எனவே ரிலையன்ஸ் நிறுவனம் தனது பங்குகளை விற்பனை செய்வதில் மும்முரம் காட்டியது.

அவ்வகையில் முகநூல் நிறுவனம் 10% பங்குகளை வாங்கியது.

தற்போது பிரபல பங்குச் சந்தை நிறுவனமான விஸ்டா ஈக்குவிடி பார்ட்னர்ஸ் நிறுவனம் ரூ. 11,367 கோடிக்கு ஜியோ பங்குகளை வாங்கி உள்ளது.

தற்போது ஜியோ முதலீட்டாளர்களில் மூன்றாவது இடத்தில் விஸ்டா உள்ளது.

முதல் இரு இடங்களில் ரிலையன்ஸ் மற்றும் முகநூல் உள்ளன.

தற்போது ரிலையன்ஸ் நிறுவன மதிப்பு 3 வாரங்களில் ரூ.60,596.37 கோடியை எட்டி உள்ளது.

More articles

Latest article