
திரைத்துறையில் கடந்த ஒரு மாதமாக நிகழும் வேலை நிறுத்தத்தினால் பலர் வேலை வாய்ப்பு இழந்துள்ளனர். கோடிக்கணக்கான ரூபாய் முடங்கி உள்ளது. திரைத்துறையினர் தங்களின் பிரச்னையை தீர்க்க அரசின் உதவியை நாடினர். தங்களுக்காக தனி வாரியம் அமைக்க வேண்டும் என சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.
அதை ஒட்டி இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு “திரைத்துறையினரின் பிரச்னை முதல்வர் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. திரைத்துறைக்கு தனி வாரியம் தேவைப்பட்டால் அவசியம் அமைக்கப்படும் என தெர்விவித்துள்ளார்.
இதற்கு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார். இதனால் விரைவில் திரைத்துறையினர் பிரச்னை ஒரு முடிவுக்கு வரும் என விஷால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel