சென்னை

ஆர் கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னும் இரு தினங்களில் அறிவிக்கப் போவதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

ஆர் கே நகர் இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது.  அந்த தேர்தலில் அவர் போட்டியிடப் போவதாக செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன.  ஒரு முக்கிய அரசியல் கட்சி விஷாலை தங்கள் வேட்பாளராக்க முயலுவதாக ஒரு செய்தி வந்துள்ளது.  மேலும் கமலஹாசன் விஷாலை தேர்தலில் போட்டியிடச் செய்து பரிசோதனை செய்ய உள்ளதாக மற்றொரு செய்தி கூறுகிறது.

நடிகர் விஷால் இது குறித்து, “ஆர் கே நகர் தேர்தலில் போட்டியிடுவது பற்றி நான் இன்னும் யோசித்து வருகிறேன்.  இரண்டு தினங்களில் எனது முடிவை அறிவிப்பேன்.  சுயேச்சையாக போட்டி இடுவேனா அல்லது அரசியல் கட்சியின் வேட்பாளராக போஒட்டி இடுவேனா என்பது குறித்து இப்போது சொல்வதற்கில்லை.  நான் முடிவு எடுத்த பின் அனைத்தையும் அறிவிக்கிறேன்” எனக் கூறி உள்ளார்.

ஆர் கே நகர் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய 4ஆம் தேதி கடைசி தினம் என்பதும், விஷால் இன்னும் இரு தினங்களில் எனது முடிவினை அறிவிப்பேன் என்பதற்கும் சம்மந்தம் இருப்பதாகவும்.  அனேகமாக விஷால் போட்டியிடக்கூடும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.