விஷால் – அனிஷா நிச்சயதார்த்த தேதி அறிவிப்பு…!

விஷால் ஹைதராபாத்தைச் சேர்ந்த நடிகை அனிஷா ஆலா ரெட்டியை திருமணம் செய்த கொள்ளப்போவதாக விஷாலின் தந்தை ஜி.கே ரெட்டி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இவர்களது நிச்சயதார்த்தம் வருகிற மார்ச் 16-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறவிருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்துகொள்வார்கள் என்று கூறப்பட்டு வருகிறது.

மேலும், இவர்களது திருமணம் வருகிற ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: anisha alla, Engagement, march, Vishal
-=-