2019-2022-ம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி நடைபெற்றது. இதில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகளால் வாக்குகள் எண்ணப்படாமல் சீல் வைக்கப்பட்டு தேர்தல் நடத்திய அதிகாரிகளின் பொறுப்பில் உள்ளது.

இதுவரை பதிவான வாக்குகள் எண்ணாமல் இருக்கும் நிலையில், வரும் 15 ஆம் தேதி, வாக்குகள் எண்ணுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது .

இந்நிலையில் நடிகர் சங்கம் முறையாக செயல்படாதது குறித்தும், தனி அதிகாரிகள் நியமனம் குறித்தும் முன்னாள் செயலாளராக இருந்த விஷால் , மற்றும் தலைவராக இருந்த நாசர் ஆகியோருக்கு பதிவுத்துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளது.