தமிழகம் முழுவதும் கனமழை காரணமாக 27 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திற்கும் விடுமுறை வழங்கப்பட்டதாக நேற்றிரவு சமூகவலைதளத்தில் தகவல் பரவியது.
https://twitter.com/jmeghanathreddy/status/1591073818822733825
இதனையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து உறுதிப்படுத்துமாறு சிலர் கேட்டுக்கொண்டனர்.
இதற்கு மாவட்ட ஆட்சியர் மேகநாத் ரெட்டி “பாலுக்கே வழியில்லை பாயசம் கேட்குதா. நேரத்தோட படுங்க காலையில பள்ளிக்கு போகனும். இது தவறான செய்தி” என்று பதிவிட்டார்.
As a fellow Virudhunagar dt citizen, I feel bad for our dt students. Sir, I req you to take steps to move the virudhunagar dt close to sea and also displace sri lanka, it too block our rain. Give western ghats to Sivakasi stone quarry owners. Then students can get rain holidays
— vijay (@iamvijayakumar) November 11, 2022
மாவட்ட ஆட்சியரின் இந்த சூப்பர் ரிப்ளையால் சமூகவலைதளத்தில் சிரிப்பலை எழுந்தது.
“கலெக்டர் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபிசர் போல” என்றும் “நம்ம மாவட்டத்திலயும் மழைபெய்ய வழி பண்ணுங்க” என்றும் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளனர்.