விராத் கோலி அதிரடியில், இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது: ஆஸ்திரேலியா வெளியேற்றம்

Must read

Vaishnavi Rajmohan
Vaishnavi Rajmohan is a biotechnologist by profession and a rationalist by practice. Her writing interests include literature, social and scientific articles.

T20 உலகப்கோப்பை 2016  சூப்பர் 10 போட்டி  இன்று மொஹாலியில் நடைப்பெற்றது.
இதில் இந்தியா-ஆஸ்திரேலியா  அணிகள் மோதின.
இன்றைய  வாழ்வா..சாவா ஆட்டத்தில், இந்தியா சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலியா  அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
 
kohli2
முன்னதாக பேட்டிங் செய்த ஆஸி. 160 ரன் கள் குவித்தது. ஆருன் ஃபின்ச் அதிகப்பட்சமாக 43 ரன் குவித்தார்.
வழக்கம் போல் தோனி வெற்றி ரன்களை குவிக்க, 19.1 ஓவரில் இந்தியா  வெற்றிப் பெற்றது.
51 பந்துகளில் 83 ரன்கள் குவித்த விராத் கோலி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப் பட்டார்.
kohli1
 
ஷேன் வாட்சனின் கடைசி ஆட்டமாகவும் இது அமைந்தது. சிறப்பாக விளையாடிய வாட்சன் ரன்குவிப்பு, பந்து வீச்சு, பீல்டிங்கில் கலக்கி  சர்வதேசப்  போட்டிகளில் இருந்து விடைப்பெற்றார்.
இந்தியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டிஸ், இங்கிலாந்து அணிகள் அடுத்து சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
இங்கிலாந்து- நியூசிலாந்து ஒரு அரையிறுதிப் போட்டியிலும்,
இந்தியா- வெஸ்ட் இண்டிஸ் மற்றொரு அரையிறுதிப் போட்டியிலும்  மோதும்.

More articles

Latest article