புதுடெல்லி: இன்ஸ்டாகிராம் சமூகவலைதளம் மூலம் அதிகம் சம்பாதித்த விளையாட்டு நட்சத்திரங்களில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோலி, முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளார்.
மேலும், இவ்வாறு முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்ற உலகின் ஒரே கிரிக்கெட் வீரர் கோலிதான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 6வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது மற்றும் படங்களை வெளியிடுவதன் மூலம், விளையாட்டு நட்சத்திரங்கள் வருமானம் ஈட்டுகின்றனர். இந்த வகையில், கோலி வெளியிட்ட 3 பதிவுகளுக்கு கிடைத்த மொத்த வருமானம் ரூ.3.58 கோடிகள்.
மார்ச் 12ம் தேதி முதல் மே 14ம் தேதி வரை இந்த கணக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கால்பந்து நட்சத்திரங்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரூ.17 கோடி, மெஸ்ஸி ரூ.11.3 கோடி மற்றும் நெய்மர் ரூ.10.4 கோடி என்று சம்பாதித்து முதல் 3 இடங்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.