அடிலெய்டு: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல்நாள் ஆட்டத்தில், இந்தியக் கேப்டன் விராத் கோலி ரன் அவுட் ஆனது, மிகப்பெரிய திருப்பத்தை ஆட்டத்தில் உண்டாக்கியது என்றுள்ளார் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன்.

இந்தியக் கேப்டன் கோலி, இன்றைய ஆட்டத்தில் 74 ரன்கள் எடுத்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தார். அவர், தொடர்ந்து ஆடி சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கெடுவாய்ப்பாக ரன்அவுட் ஆனார். இதனையடுத்து, இந்திய அணி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை குறுகிய இடைவெளியில் இழந்தது.

தற்போது இதுகுறித்து கூறியுள்ள நாதன் லயன், “கோலியின் ரன்அவுட் மிகப்பெரியது. அதுவும், விராத் கோலியைப் போன்ற ஒரு விக்கெட் கிடைப்பது சாதாரண விஷயமா? இதன்மூலம், ஆட்டத்தில் எங்களின் ஆதிக்கத்தை அதிகரிக்க முடிந்தது. ஆட்டத்தில் அது மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

அவர் நன்றாக பேட்டிங் செய்து கொண்டிருந்தார். எனவே, அவரின் ரன்அவுட் பெரிய மகிழ்ச்சிகரமான ஒன்று” என்றுள்ளார் அவர்.