மும்பை,
கடந்த ஆண்டின் (2017) ஐசிசியின் சிறந்த வீரர் விருது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) கிரிக்கெட் ஜாம்பவான் சர் கார்பீல்டு சோபர்ஸ் பெயரில் ஆண்டுதோறும் கிரிக்கெட் வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த விருது கிரிக்கெட்டில் உயர்ந்த விருதாக கருதப்படுகிறது.
இந்நிலையில், தற்போது 2017ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர்கள் பட்டியலை ஐசிசி அறிவித்து உள்ளது.
அதன்படி, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக தேர்வு செய்து அறிவித்து உள்ளது. மேலும் 2017ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராகவும் கோலி செய்யப்பட்டுள்ளார்.
மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வீரராக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டி20 கிரிக்கெட்டில், சிறந்த செயல்பாட்டுக்கான விருது இந்திய வீரர் சஹலுக்குக் கிடைத்துள்ளது. இவர் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் 25 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்ததற்காக கொடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் விருதுக்கு, பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஹசன் அலி தேர்வாகி உள்ளார். இவர் சாம்பியன் கோப்பை தொடரில் திறமையான விளையாடி இந்திய அணியை வீழ்த்த காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஐசிசி உறுப்பு நாடுகளைச் சேர்ந்த அணிகளில், சிறந்த வீரருக்கான விருது ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானுக்கும், சிறந்த அம்யருக்கான டேவிட் ஷெப்பர்டு விருது மைரஸ் எராஸ்மஸ்க்குக் வழங்கப்படுகிறது.