ஐசிசி தரவரிசை பட்டியல்….900 புள்ளி பெற்று விராட் கோலி புதிய சாதனை

Must read

சர்வதேச கிரிக்கெட் வாரியம் வீரர்களின் சிறப்பான பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு புள்ளிகள் அடிப்படையில் தரவரிசைப்பட்டியலை வெளியிடுகிறது. இந்த வகையில் தரவரிசைப் பட்டியலில் 900 புள்ளிகளை பெற்று விராட் கோலி புதிய வரலாறு படைத்துள்ளார். கவாஸ்கருக்கு பிறகு தரவரிசையில் 900 புள்ளிகளை பெற்ற இந்திய வீரர் என்ற சாதனையை கோலி படைத்தார்.

சச்சின் தெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகிய இருவரும் 900 புள்ளிகளை நெருங்கிய போதிலும், 900 புள்ளிகளை எட்டியதில்லை. 2002ம் ஆண்டு டெண்டுல்கர் அதிகபட்சமாக 898 புள்ளிகள் வரை பெற்றுள்ளார். டிராவிட் 2005ம் ஆண்டு அதிகபட்சமாக 892 புள்ளிகள் வரை எட்டினார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 900 புள்ளிகளை எட்டிய 31-வது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். டான் பிராட்மேன் அதிகபட்சமாக 961 புள்ளிகள் பெற்றுள்ளார். இவருக்கு அடுத்து ஸ்டீவ் ஸ்மித் 947 புள்ளியும், லென் ஹட்டன் 945 புள்ளியும், ரிக்கி பாண்டிங் மற்றும் ஜாக் ஹோப்ஸ் 942 புள்ளிகளும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article