கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் பலகோடி ரூபாய் பணம், தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சேகர் ரெட்டி வீட்டில் இருந்து பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது. பலவித முறைகேடுகள் செய்ததாக அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சேகர் ரெட்டியிடமிருந்து கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.. இதன் அடிப்படையில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே வருமான வரித்துறையினர் தமிழக தலைமைச்செயலாளராக இருந்த ராமமனோகர்ராவ் வீட்டில் சோதனை நடத்தினர். இங்கும் பல்வேறு ஆவணங்கள், பணம், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சோதனை நடத்தப்பட்டபோது, பாதுகாப்புக்கு மத்திய துணை ராணுவப்படை வந்தது. இப்படி நடந்தது இதுவே முதல்முறை.
இன்த நிலையில், மேலும் 20 கம்பெனி துணை ராணுவ படை சென்னையில் குவிக்கபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது, சில அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் இன்று மிக பெரிய ரெய்டுகள் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.