டெஹ்ரான்

ரானில் அதிபருக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் கடும் வன்முறை வெடித்துள்ளது.

தற்போது ஈரான் நாட்டில் விலைவாசிகள் கட்டுக்கு அடங்காமல் உயர்ந்து வருகின்றது.    மக்களின் வாழ்வாதாரம் மிகவும் சீர்குலைந்து வருகிறது.   பொருளாதாரப் பிரச்னைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.   இவற்றை கட்டுப்படுத்தாத ஈரான் நாட்டு அதிபர் ரவுகானியை எதிர்த்து நாடெங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த போராட்டங்களில் கடும் வன்முறை வெடித்துள்ளது.    நேற்று குவாதெரிஜியான் நகரில் ஒரு காவல்நிலையத்தை போராட்டக்காரர்கள் எரித்துள்ளனர்.   அதை தடுத்த காவல் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் உண்டாகி பலர் உயிரிழந்துள்ளனர்.

அரசு போராட்டக்காரர்களை ஒடுக்க கடும் முயற்சி மேற்கொண்டுள்ளது.   நஜாபாத் நகரில்  நேற்று இரவு வெடித்த வன்முறையில் போலீஸ் ஒருவர் வேட்டைத் துப்பாக்கியால் சுட்டும் கொல்லப்பட்டுள்ளார்.   மேலும் சிலர்  படுகாயம் அடைந்துள்ளதாக ஈரான் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

ஈரான் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக ட்ரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில், “ பல வருடங்களாக உணவுக்கும் சுதந்திரத்துக்கும் ஈரானிய மக்கள் துயருறுகின்றனர்.   மனித உரிமைகள் மட்டுமின்றி ஈரானின் செல்வங்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.   இது மாற்றத்துக்கான நேரம்”  எனக் கூறி உள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தனது முகநூல் பக்கத்தில் ஈரான் மக்களின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளார்.