க்னோ

த்தரப்பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிப்பைத் தொடர்ந்து 17 மாவட்டங்களில் கடும் வன்முறை வெடித்துள்ளது.

File picture

சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 825 இடங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடந்தது.  இந்த தேர்தலில்  பாஜக மற்றும் அப்னா தளம் உள்ளிட்ட கட்சி கூட்டணி அமைத்திருந்தன.  இந்த தேர்தலில் பாஜக மற்றும் அப்னாதளம் இணைந்து 626 இடங்களைக் கைப்பற்றி உள்ளன.  ஆனால் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்தே மாநிலத்தில் பல அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு 17 மாவட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈட்டவா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரசாந்த் குமார் பிரசாத் கூறுகையில் “ பார்புரா மண்டலத்தில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் தடுப்புகளை மீறி வந்தவர்களைத் தடுத்தபோது, சிலர் என் மீது தாக்குதல் நடத்தித் தப்பிவிட்டனர்” எனத் தெரிவித்தார்.

இதைப் போல் பல்வேறு மாவட்டங்களில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் காவல்துறை மீது தாக்குதல் நடத்தப்பட்டன, செய்திகளைச் சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த தாக்குதலில் பாஜக, சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “உபி மாநிலத்தை ஆளும் பாஜக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, தங்களுக்குச் சாதகமாக வாக்குகளைப் பெற்றுள்ளது.  தேர்தலில் போட்டியிட்ட பஞ்சாயத்து வேட்பாளர்கள் வெளிப்படையாகவே கடத்தப்பட்டனர். மேலும் சமாஜ்வாதிக் கட்சியின் வேட்பாளர்கள் வீடுகளில் திடீர் சோதனை நடத்தி  உத்தரப்பிரதேசத்தில் ஜனநாயகத்தை பாஜக பிணையக் கைதியாக வைத்துள்ளது” எனக் கூறி உள்ளார்.