a
சேலம்:
ற்கொலை செய்து கொண்ட இளம்பெண் வினுப்பிரியாவின் படத்தை ஆபாசமாக சித்தரித்து ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்டிருந்த படத்தை அழிப்பதற்காக, புகார் கொடுக்க வந்த பெற்றோரை காவல்துறையினர் அலட்சியப்படுத்தியதற்காக  அவர்களிடம் கைகூப்பி மன்னிப்பு கேட்டார் சேலம் மாவட்ட எஸ்பி அமித்குமார் சிங். மேலும், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பகுதியை சேர்ந்தவர் வினுப்ரியா (வயது 20). இவரது படத்தை மார்ஃபிங் செய்து ஆபாசமாக, ஃபேஸ்புக்கில் சிலர் வெளியிட்டனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வினுப்ரியாவின் பெற்றோர் சித்தரிக்கப்பட்ட அந்த  ஆபாச படத்தை அழிக்க கோரி சேலம் எஸ்.பி. அமித்குமார்சிங்கிடம் புகார் மனு கொடுத்தனர்.

வினுப்பிரியா
வினுப்பிரியா

பிணமாக
பிணமாக

அவர் சங்ககிரி டி.எஸ்.பி. கந்தசாமியிடம் கொடுக்க சொல்லியிருக்கிறார். டி.எஸ்.பி. கந்தசாமியிடம் பெற்றோர் புகார் கொடுக்க சென்றபோது அவர், மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் விவேகானந்தனிடம் கொடுக்க சொல்லியிருக்கிறார். அங்கு சென்றபோது இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சேலம் சைபர் க்ரைமில் கொடுக்க சொல்லியிருக்கிறார்.
அவர்களோ, இதை உடனே அழிக்க முடியாது. 10, 15 நாட்கள் ஆகும் என்று கூறியிருக்கிறார்கள். அதோடு, மகளை ஆபாசமாக சித்தரித்து ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்ட படத்தை அழிக்க வேண்டி காவல்துறையினருக்கு 2 ஆயிரம் பணமும், ஒரு செல்ஃபோனும் லஞ்சமாக கேட்டிருக்கிறார்கள். அதையும் வினுப்பிரியா பெற்றோர்  கொடுத்துள்ளனர்.
ஆனால் படம் அழிக்கப்படவில்லை.  இதனால் மனமுடைந்த வினுப்பிரியா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில், அலட்சியமாக செயல்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று வினுப்பிரியாவின் பெற்றோர் மருத்துவமனை வளாகத்திலேயே போராட்டம் நடத்தினார்கள்.
IMG-20160628-WA0016
பிறகு, சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத்தை நேரில் சந்தித்து, அலட்சியமாக செயல்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து, சேலம் மாவட்ட எஸ்பி அமித்குமார் சிங், வினுப்பிரியாவின் பெற்றோரை சந்தித்தார். அப்போது, தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள் என்று கைகூப்பி மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
மேலும், “வினுப்பிரியா விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் (பெற்றோர்கள்) குறிப்பிட்டுள்ள காவலர்களை சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.
எஸ்பி அமித்குமார் சிங்கின் உறுதிமொழியை ஏற்றுக் கொண்ட பெற்றோர், போராட்டத்தை கைவிட்டு வினுப்பிரியா உடலை பெற்றுக் கொண்டனர்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எஸ்பி அமித்குமார் சிங், “வினுப்பிரியா விவகாரத்தில் குற்றவாளியை பிடிக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பெண்கள் பாதிப்பு குறித்த புகாரை எப்படி கையாள்வது என்பது தொடர்பாக காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்” என்றார்.