தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் தயாரிப்பில் சமுத்திரகனி & தம்பி ராமையா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் விநோதய சித்தம் திரைப்படம் வருகிற அக்டோபர் 13ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக ZEE5 ஒரிஜினல் OTT தளத்தில் நேரடியாக ரிலீசாகிறது.

மேலும் நடிகர்கள் ஜெயப்பிரகாஷ், முனிஸ்காந்த் ஆகியோருடன் இணைந்து நடிகை சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ள விநோதய சித்தம் திரைப்படத்திற்கு N.K.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இன்று விநோதய சித்தம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இயக்குனரும் நடிகருமான M.சசிகுமார் இதை வெளியிட்டுள்ளார் .