சென்னை: தமிழ்நாட்டின் தென்கோடி பகுதியான தூத்துக்குடியில் ஆலை அமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டு வரும் வின்ஃபாஸ்ட் மின்சார கார்களுக்கான முன்பதிவு இம்மாதம் தொடக்கம், அந்நிறுவனத்தின் ஆசியா தலைவர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள வின்ஃபாஸ்ட் மின்சார கார் ஆலையில் ஆண்டுக்கு 1லட்சத்துக்கு 50ஆயிரம் கார்களை தயாரிக்க முடிவு செய்து, உற்பத்தி நடைபெற்று வரும் நிலையில், இந்த மாதம் மன்சார கார்களுக்கான முன்பதிவு தொடங்கும் என அந்நிறுவனத்தின் ஆசிய தலைவர் தெரிவித்து உள்ளார்.
வியட்நாமிய மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான விங்ரூப்பின் மின்சார வாகன (EV) பிரிவான வின்ஃபாஸ்ட் இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டின் தூத்துக்குடி பகுதியில் உள்ள ஆலையில், தனது தயாரிப்பை தொடங்கி உள்ள நிலையில், அதை வெளியிட தயாராகி வருகிறது
தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் ரூ.16,000 கோடியில் மின்சார கார் ஆலையை அமைத்தது. இங்கு கார் தயாரிப்பு பணிகள் ஜரூராக நடைபெற்று வருகிறது. ஆண்டுக்கு 1.5 லட்சம் மின்சார கார்களை உற்பத்தி செய்ய வின்ஃபாஸ்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2030க்குள் உள்ளூரைச் சேர்ந்த 3,500 பேரை தூத்துக்குடி ஆலையில் பணியில் அமர்த்த ஆசிய சிஇஓ பாம்சான் முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து மின்சார் கார் விற்பனையை விரைவில் தொடங்க உள்ளது. இதையடுத்து, மின்சார கார்களுக்கான முன்பதிவை இந்த மாதம் தொடங்குவதாக அறிவித்து உள்ளது. . இந்த மாதம் முன்பதிவுகள் தொடங்கும் என்று நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், பண்டிகை காலத்துக்குள் VF 7,VF 6 வகை மின்சார கார்களை காட்சிக்கு வைத்து புக்கிங்கை தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளவர், தூத்துக்குடி ஆலையில் வின்ஃபாஸ்ட் ஆலையில், 2030 ஆம் ஆண்டுக்குள் 2 பில்லியன் டாலர் முதலீட்டை முழுமையாகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், புதிய மின்சார கார் விற்பனைக்கான முன்பதிவு தொடங்கும் முன்பு மின்சார கார்களை வணிக வளாகம், விமான நிலையங்களில் காட்சிக்கு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.