ஞான முதல்வனாம் விநாயகப் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. விநாயகர் கோவில்கள் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆங்காங்கே சாலை ஓரங்களிலும், தெருக்களில் விநாயாகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜிக்கப்படுகின்றன.
விநாயகரை வழிப்பட வீடுகள்தோறும் மாவிலைத் தோரணம் கட்டி விநாயகர் வழிபாடு நடைபெறுகிறது. குடும்பத்தினர்கள் களிமண்ணால் ஆன விநாயகர் சிலையை வாங்கி ஒரு பெரிய தட்டிலோ அல்லது பக்கெட்டிலோ பத்திரமாக வைத்து நம் வீட்டுக்கு அவரை அழைத்துவந்து பூஜைகள் செய்கின்றனர்.
வீட்டின் பூஜையறையில் வைத்து, அவருக்கு பிடித்தமான லட்டு, கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, போன்ற தின்பண்டங்கள் மற்றும் முக்கனிகளுடன், எருக்கம்பூ மாலை, வன்னி இலை அறுகம்புல் வைத்து பூஜை செய்து வருகின்றனர்.
இன்று விநாயகர் பூஜைக்கான நேரம்:
சதுர்த்தி திதி தொடங்கும் நேரம்: செப்டம்பர் 2, அதிகாலை 4:57
சதுர்த்தி திதி முடியும் நேரம்: 2019 செப்டம்பர் 3, அதிகாலை 1:54
விநாயகர் பூஜைக்கு ஏற்ற நேரம்: காலை 11.05 மணி முதல் மதியம் 1:36 மணி வரை
மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை
பக்தர்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.