சென்னை:
விழுப்புரம் ஒருதலைக்காதல் விவகாரத்தில், எரித்துக்கொல்லப்பட்ட நவீனாவின் தங்கை நந்தினியை பா.ம.க. நிறுவனர் டாக்டர் இராமதாஸ்  நலம் விசாரித்தார்.
13962485_1420140084666853_3233974037160434200_n
விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு ரோடு, வ.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அங்கப்பன், கூலி தொழிலாளி. இவரது மகள் நவீனா (18). விழுப்புரம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துவந்தார்.
மாம்பழப்பட்டு ரோடு இந்திரா நகரைச் சேர்ந்தவர் செந்தில் (28) தனியார் பேருந்து நிறுவன ஊழியர்.  இவர் நவீனாவை ஒருதலையாக காதலித்துள்ளார். தன்னை காதலிக்கும்படி நவீனாவுக்கு தொடர்ந்து தொந்திரவு கொடுத்துவந்தார்.
இந்த நிலையில், நவீனாவின் வீட்டுக்குள் புகுந்த செந்தில் தன் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துக்கொண்டதோடு, நவீனாவையும் இறுகப்பிடித்துக்கொண்டார் காயம்பட்ட இருவரும் உயிரிழந்தார்கள்.
இந்த சம்பவத்தின்போது, நவீனாவை காப்பாற்றும் முயற்றியில் அவரது தங்கை நந்தினிக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டன. முகம் மற்றும் கையில் தோல் பொசுங்கியது.

நந்தினி
நந்தினி

சிகிச்சை பெற்று வரும் நந்தினியை நலம் விசாரித்த ராமதாஸ், விரைவில் குணமடைய வாழ்த்தினார்.
ராமதாஸ்
ராமதாஸ்

மேலும், நடந்த சம்பவங்களை நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டே இருக்காமல், படிப்பில் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்று அறிவுரையும் கூறினார்.