Patrikai.com official YouTube Channel
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்

தமிழக காவல்துறையின் தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று (திங்கள்கிழமை ) போனில் தொடர்பு கொண்ட ஒரு நபர், நடிகர் சூர்யாவின்வின் ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்து சிதறும் எனக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.
இதையடுத்து பரபரப்பு அடைந்த காவல்துறையினர், உடனே அநத பகுதியைச் சேர்ந்த தேனாம்பேட்டை காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சூர்யா அலுவலகத்துக்கு போலீஸார் மற்றும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் சென்றனர். ஆனால், அங்கு சென்று பார்த்தபோது, அங்கிருந்த சூர்யா அலுவலகம் கடந்த 6 மாதங்களுக்கு முன் அடையாறுக்கு மாற்றப்பட்டிருப்பது தெரிய வந்தது. இருந்தாலும் அங்கு சோதனை நடத்தப்பட்டது. அங்கு எந்தவொரு பொருளும் கிடைக்காத நிலையில், வெடிகுண்டு புரளி என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, தேனாம்பேட்டை போலீஸார், சைபர் குற்றப்பிரிவினருடன் இணைந்து நடத்திய விசாரணையி நடத்தினர். இதில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியைச் சேர்ந்த புவனேஷ் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் புவனேஷை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், ஏற்கனவே முதலமைச்சர் பழனிசாமி, நடிகர் ரஜினி உள்பட பலரது வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது.