சென்னை:

ன்று தமிழகம் முழுவதும் விறுவிறுப்வபான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வாக்களித்தவர்கள், தங்களின் விரலின் மீது வைக்கப்பட்ட மையை காட்டினால்  அவர்கள் சாப்பிடும்  உணவுக்கான பில்லில் 10% தள்ளுபடி செய்யப்படும் என்று  ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம்  ஏற்கனவே அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், விழுப்புரத்தில், கோழிக்கடை உரிமையாளர் ஒருவர் வாக்குப்பதிவை முன்னிட்டு, ஒரு கிலோ கோழிக்கறி வாங்கினால், கால்கிலோ கறி இலவசம் என்று அதிரடி அறிவிப்பை  வெளியிட்டு அசத்தி உள்ளார்.

அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வாக்களிப்பது உங்களது உரிமை, அது நமது ஜனநாயக கடமை என்று வலியுறுத்தியும், தேர்தலில் வாக்களித்தை உறுதி செய்யும் வகையில் தங்களது அடையாள மையை காட்டினால், ஒருகிலோ கறி வாங்கும்போது கால்கிலோ கறி இலவசம் என்று அறிவித்து உள்ளது விழுப்புரத்தை சேர்ந்த ராம் பிராய்லர் மற்றும் சிக்கன் சென்டர்.

கோழிக்கறி கடைக்காரரின் இந்த அதிரடி அறிவிப்பு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தேர்தலில் மக்கள் 100% வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பல விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில்,  தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கமும், வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில்,   ஓட்டல் பில்களில் 10% தள்ளுபடி பெற்றுகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.