சென்னை,

மிழக சட்டமன்றத்தில், வில்லிவாக்கம் ரெயில்வே பாலத்திற்கு நிதி ஒதுக்கியும் பாலம் கட்டாதது ஏன்? எதிர்க்கட்சி தலைவரும், கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான  மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

அப்போது,  வில்லிவாக்கம் ரெயில்வே  பாலம் குறித்து 2015-ம் ஆண்டு மத்திய ரெயில்வே அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியதாகவும், ரூ.7.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய ரெயில்வே அமைச்சர் பதில் அளித்ததுள்ளார்  என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு நிதி ஒதுக்கி 2 ஆண்டுகள் ஆன நிலையிலும் இன்னும் பாலம் கட்டாதது ஏன் என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதில் அளித்த தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வில்லிவாக்கத்தில் நிலத்தை கையகப்படுத்திய பின் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்படும் என்று எஸ்.பி.வேலுமணி பதில் கூறினார்.

ஜிகேஎம் காலனி-பட்மேடு இடையே மேம்பாலம் அமைக்க ரூ.68.77 கோடியில் திட்ட அறிக்கை தயாராக உள்ளதாகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

பெரம்பூர் ஐ.சி.எப் மேம்பாலம்  சென்னை மாநகராட்சியின் அனுமதியை பெற்று ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் தொடங்கும் என்றும் அமைச்சர் வேலுமணி கூறினார்.