திருச்சி: உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கு வந்த தாசில்தார் வாகனத்தை கிராம மக்கள் மறித்து ‘பட்டா’ கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அனைத்து பிரச்சினைகளக்கும் உடனடி தீர்வு காணப்படும் என கூறப்பட்டாலும் பல  பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதில் தாமதமும், அதிகாரிகளின் லஞ்ச லாவண்யமும் தலைவிரித்து ஆடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஏற்கனவே இந்த முகாமில், நிலம் அளப்பது, பட்டா மாறுதல்,  கூட்டு பட்டு பிரிவினை போன்றவற்றுக்கு பலர் மனு கொடுத்துள்ள நிலையில், அதற்கு தாசில்தார், விஇஏ, நில அளவையாளர் என பலரும் நிலத்தின் அளவுகளுக்கு ஏற்றவாறு   ரூ.10 ஆயிரம் முதல் லட்சம் வரை நில பேரம் பேசுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாதாரணமாக ஒரு நிலத்தை அளந்து, அதற்கான பட்டா பிரித்து கொடுக்கவே குறைந்த பட்சம் ரூ.10 ஆயிரம் விஏஓவுக்கு கொடுக்க வேண்டியது இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில்,   திருச்சி அருகே பரபரப்பு திருவெறும்பூர் அருகே கீழ முல்லைக்குடி ஊராட்சி காந்திபுரத்தைச் சேர்ந்த மக்கள்,  உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கு வந்த தாசில்தார் வாகனத்தை மறித்து, தங்களுக்க பட்டா எப்போது கிடைக்கும் என கேட்டு மறியல்  செய்தது பரபரப்பை எற்படத்தி உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில்  நேற்று  (அக்டோபர் 31) திருவெறும்பூர்  ஊராட்சி ஒன்றியம் கீழ முல்லக்குடி ஊராட்சி, காந்திபுரம் பகுதியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் எம்.எல்.ஏ கே.என் சேகரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கே.எஸ்.எம் கருணாநிதி ஆகியோர் கலந்துகொண்டு முகாமினை தொடங்கி வைத்து சென்றனர்.

அப்போது, அப்பகுதியை சேர்ந்த மக்கள் தங்களுக்கு சாலை வசதி, வடிகால் வசதி, கடந்த 50 ஆண்டுகளாக பட்டாக்கள் வழங்கவில்லை என்பதை வலியுறுத்தி அப்பகுதி சாலையில் முள் செடிகளை வெட்டி போட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதையடுத்து  மிரட்டி,  முள்செடிகளை அகற்றினர்.

இந் நிலையில் அப்பகுதிக்கு  திருவெறும்பூர் தாசில்தார் தனலட்சுமி வருகை தந்தார். இதை அறிந்த அந்த பகுதி மக்கள் வாகனத்தை மறித்தனர்.  நாங்கள் பல ஆண்டுகளாக பட்டா கேட்டு கோரிக்கை வைத்தும் அதனை அரசு நிர்வாகம் செய்து கொடுப்பதில்லை, அடிப்படை வசதிகளும் செய்து கொடுப்பதில்லை  இது தொடர்பாக பல முறை மனு கொடுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது முகாம் என்று கூறி எங்களை ஏமாற்றுகின்றனர். அதனால்,  எங்களது கோரிக்கை மீது நடவடிக்கை எடுப்பீர்களா என்று தாசில்தாரிடம் முறையிட்டனர்.

இதையடுத்து, உங்களது கோரிக்கை மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தான் தனலட்சுமி உறுதி அளித்தார். இதையடுத்து, பொதுமக்கள் அவரது வாகனத்தை விடுத்தனர்.

இதனால், அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், அந்த கிராம மக்கள் சென்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

முகாமை தொடங்கி வைத்த   அப்பகுதி  அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் பல முறை கூறியும்,  தங்களின் கோரிக்கை குறித்து  அவர்கள் நேரில் வந்து கேட்கவில்லை, தங்களை கண்டுகொள்ளவும் இல்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்தது குறிப்பிடத்தக்கது.