சென்னை: கொரோனா தொற்றை காரணம் காட்டி ரத்து செய்யப்பட்ட கிராம சபை கூட்டங்களை மீண்டும் உடத்த உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி, உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் முறையிடப்பட்டு உள்ளது.
சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி உள்பட முக்கிய நாட்களில், தமிழகத்தில் கிராம சபைக்கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி கடந்த மே மாதம் உழைப்பாளர் தினத்தன்று கிராம சபை ரத்து செய்யப்பட்ட து. இந்த நிலையில், தற்போது கொரோ முடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், கடந்த 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கிராம சபை கூட்டத்தை, கொரோனா தொற்று பரவலை காரணம் காட்டி, தமிழகஅரசு ரத்து செய்து உத்தரவிட்டது.
இருந்தாலும், திமுகவினர் இடம்பெற்றுள்ள ஊராட்சிகளில் அரசின் தடை உத்தரவை மீறி கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது. அதில், மத்திய வேளாண் மசோதாக்களுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, மேலும், சென்னை புறநகர் பகுதிகளில் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில், திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அக்டோபர் 2ம் தேதி ரத்து செய்யப்பட்ட கிராம சபைக்கூட்டத்தை மீண்டும் நடத்தக்கோரி அருண் அய்யனார் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் முறையீடு செய்தார். கொரோனாவை காரணம் காட்டி கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பது ஏற்கத்தக்க செயல் அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
இதனை கேட்டுக் கொண்ட நீதிபதிகள், முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்க தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.