சென்னை:

மிழகத்தில் காலியாக விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி உள்பட  நாடு முழுவதும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதிகளில்  வேட்புமனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளிலும் இன்று காலை 11 மணி முதல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி உள்ளது.

விக்கிரவாண்டி தொகுதிக்கு விக்கிரவாண்டி வட்டாச்சியர் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவல கத்தில் தேர்தல் அலுவலர் சந்திரசேகரனிடம் மனுதாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல நாங்குநேரி தொகுதியிலும் தேர்தல் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் செப்டம்பர் 30ந்தேதி

விக்கிரவாண்டியில் திமுகவும், நாங்குநேரியில் காங்கிரசும் போட்டியிடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். அதுபோல இரு தொகுதிகளிலும்  அதிமுகவும் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில், அங்கு வெற்றி பெறப்போவது  யார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.