சென்னை: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியின்  திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா என  முதலமைச்சர்  மற்றும் திமுக தலைவரான மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தல் கழக வேட்பாளரா திமுக விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா-ஐ திமு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.,வாக, தி.மு.க.,வை சேர்ந்த புகழேந்தி  ஏப்ரல் 6-ந் தேதி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.  அதையடுத்து,  ஜூலை 10ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என  இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. உடனே அந்த தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் ஜூன் 14ஆம் தேதி தொடங்க உள்ளது. வாக்கு எண்ணிக்கை  ஜூலை 13ஆம் தேதியன்று  நடைபெற உள்ளது.

இந்த நிலையில்,   விக்கிரவாண்டி தொகுதிக்கான திமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

இதுதொடர்பாக திமுக தலைவரு மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருகிற 10-07-24 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் தோழமைக் கட்சிகளின் ஆதரவுடன் கழக வேட்பாளராக, அன்னியூர் சிவா (விவசாய தொழிலாளர் அணிச் செயலாளர்) போட்டியிடுவார் என தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஜூலை 10ந்தேதி தேர்தல்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு