சென்னை: திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவு காரணமாக,  விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளதாக தமிழ்நாடு அரசிதழில் வெளியிட்ட நிலையில்,  தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவித்து உள்ளது.

திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக்குறைவால்  2024,  ஏப்ரல் 6ம் தேதி காலமானார். அவர்  மறைந்ததால் விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளதாக தமிழக சட்டப்பேரவை செயலகம் அறிவித்தது.  இதனால், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலை உருவாகி உள்ளது. பொதுவாக ஒரு தொகுதியின் எம்எல்ஏ மரணமடைந்தால் அல்லது பதவியை ராஜினாமா செய்தால் அடுத்த 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படும். அந்த வகையில் அடுத்த 6 மாதத்துக்குள் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இதன் தொடர் நடவடிக்கையாக, , திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைந்ததால் விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளதாக  சட்டப்பேரவை செயலகம் தரப்பில், தேர்தல் ஆணையத்துக்கு  கடிதம் மூலம் தகவல் தெரிவித்தது.  மேலும், இதுதொடர்பான அறிவிப்பு தமிழ்நாடு அரசின் அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, விக்கிரவாண்டி தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல்  நடத்தப்படும் வாய்ப்பு உள்ளது. மக்களவை தேர்தல் முடிவடைந்ததும், விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தலை தொடர்பாக   தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.