திண்டிவனம்:
விக்கிரவாண்டியில் வரும் 21ந்தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அங்கு தேர்தல் ஆணையம் பலத்த கண்காணிப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த நிலையில் திண்டிவனம் அருகே பறக்கும்படையினர் நடத்திய வாகன சோதனையில், ரூ.9 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குனேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு வரும் 21-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுபொருட்கள் கொடுப்பதை தடுக்க அங்கு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் பறக்கும் படையினர் வாகனசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று அதிகாலை திண்டிவனம் அருகே சலவாதி என்ற இடத்தில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் ஒன்றினை சோதனையிட்டனர்.
அதில் ரூ.9 லட்சத்து 16 ஆயிரம் பணம் முறையான ஆவணங்கள் ஏதுமின்றி கொண்டு சொல்லப்ப ட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து திண்டிவனம் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.