சென்னை:
விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. அதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் அக்டோபர் 3ந்தேதி அறிவிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அடுத்த மாதம் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சியும் களத்தில் உள்ளது.
இந்த நிலையில், கடந்த 23ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது.அதைத்தொடர்ந்து இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது.
விக்கிரவாண்டித் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு பரிசீலனை தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரன் முன்னிலையில் நடைபெற்றது. இங்கு மொத்தம் 23 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில், திமுக வேட்பாளர் புகழேந்தி, அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி உள்பட பலரது மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இம்மாதம் 21-ம் தேதி நடைபெற உள்ளது.