சென்னை:

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி நாங்குநேரி தொகுதிகளுக்கு வரும் 21ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.  இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தேமுதிக பொருளாளர் பிரேமலதா உள்பட பலர் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தேமுதிக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 19ந்தேதி அன்று விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.