நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது விக்ரம் லேண்டர்.
தென் துருவத்தில் ஆய்வுக் கலனை இறக்கிய முதல் நாடு என்ற பெருமையை பெற்றது இந்தியா.
இஸ்ரோ திட்டமிட்டபடி 2023, ஆகஸ்ட் 23 இந்திய நேரப்படி சரியாக மாலை 6:04 மணிக்கு விக்ரம் லேண்டர் கலனை நிலவில் இறக்கியது.
இதன் மூலம் நிலவில் ஆய்வு செய்யும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக இந்தியா இடம்பெற்றுள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வை இஸ்ரோ யூ டியூப் சேனலில் 80 லட்சத்துக்கும் அதிகமானோர் நேரலையில் பார்த்தனர்.