விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று மாலை வெளியானது.
இதனைத் தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாவது லுக் போஸ்டர்களும் வெளியானது.

பைக் மீது அமர்ந்தபடி டெரர் லுக்கில் விஜய் இருக்கும் இந்த மூன்றாவது லுக் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படம் 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
[youtube-feed feed=1]