நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி உள்ளது. இந்தப் படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்குகிறார். கதாநாயகியாக கீர்த்தி சுரேஷும், இசையமப்பாளராக ஏ ஆர் ரகுமானும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். படத்தொகுப்பை ஸ்ரீகர் பிரசாத்தும் ஒளிப்பதிவை கிரிஷ் கங்காதரனும் கவனித்து வருகின்றனர்.
சன் பிக்சர்ஸ் எந்திரன் படத்துக்கு பிறகு தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், யோகி பாபு ஆகிய நடிகர்கள் பற்றி மட்டுமே இதுவரை அறிவிப்பு வந்துள்ளது.
இன்று இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இந்தப் பட தொடக்கவிழாவை பற்றி வெளியிட்டுள்ள டிவிட்டில் “இனிய தீபாவளி வாழ்த்துக்கள்” என ஆங்கிலத்தில் பதிந்துள்ளார். இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளதை அவர் சூசகமாக குறிப்பிட்டுள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.